×

துல்கர் சல்மான் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூர்யா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் பிருந்தா. இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'ஹே சினாமிகா. இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணியாற்றுகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படம் வரும் பிப்ரவர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Tags : Surya ,Tulkar Salman ,
× RELATED பாலா இயக்கிய வணங்கான் அடுத்த மாதம் வெளியாகிறது