×

கீர்த்திக்கு உதவிய மோகன்லால்

மோகன்லால், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம். இந்த படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ஒரு நபர் கீர்த்தி சுரேஷை ஆபாசமாக திட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இது பற்றி அறிந்த மோகன்லால், கீர்த்தியின் தந்தை சுரேஷுக்கு போன் செய்து இந்த வீடியோ பற்றி தெரிவித்தார். 

இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் அறிவுரை கூறினார். இதையடுத்து இது தொடர்பாக அந்த நபர் மீது கீர்த்தியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். மோகன்லால், கீர்த்தி சுரேஷின் குடும்ப நண்பர். அத்துடன் இருவரும் மரைக்காயர் படத்திலும் நடித்திருப்பதால் இவர்களின் நட்பு வலுவாகி இருப்பதாக மல்லுவுட்டில் சொல்லப்படுகிறது.

Tags : Mohanlal ,Keerthi ,
× RELATED ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில்,...