×

ஜனவரியில் வெளிவருகிறது சதுரங்க வேட்டை 2

எச்.வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை படம் வெற்றி பெற்ற பிறகு அதன் இரண்டாம் பாகம் தயாரானது. இதில் அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்தார்கள்.  எச்.வினோத்தின் கதையை சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கினார். மனோபாலா தயாரித்தார். படம் தயாரான பிறகு சில பிரச்சினைகள் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேல் கிடப்பில் கிடந்தது.

தற்போது இந்த படத்தை தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் என்பவர் வாங்கி வெளியிடுகிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று சதுரங்க வேட்டை. இதன் இரண்டாம் பாகம் வெளிவருவதைப் பற்றி கேள்விப்பட்டபோது, மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. இருப்பினும், எதிர்பாராத சூழ்நிலைகளால் படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து, நான் பெரிதும்  ஏமாற்றமடைந்தேன். இறுதியில் சதுரங்க வேட்டை 2 படத்தை எங்கள் நிறுவனம் மூலம் வெளியிட  முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். என்றார்.

Tags :
× RELATED சினிமா நடிகர்களை கொண்டாடாதீர்கள்: பஹத் பாசில் அதிரடி