×

 டெட் தேர்வு எழுதியோரின் விவரம் சரிபார்க்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களின் உண்மை சான்றுகளை, அந்தந்த மாவட்டங்களில் சரிபார்க்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (டெட்) நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் நபர்கள், தங்களின் உண்மை சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால், விண்ணப்பத்துடன் சான்றுகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற நபர்களின் விவரங்கள் அனைத்தும் அந்த நபர்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சான்றுகளின் உண்மைத் தன்மை கோரப்படும் கருத்துருகளுக்கு  தங்கள் மாவட்டத்தில் உள்ள தேர்வு எழுதிய நபர்களின் விவரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து சான்றின் உண்மைத் தன்மை வழங்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். 2012, 2013, 2017, 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்வுகளுக்கான சான்றிதழ் திருத்தங்கள், உண்மைத் தன்மை அனைத்தும் தேர்வு எழுதிய மாவட்டஅலுவலகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவில் கூறியுள்ளது….

The post  டெட் தேர்வு எழுதியோரின் விவரம் சரிபார்க்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : TET ,Teacher Examination Board ,CHENNAI ,Teachers' Examination Board ,
× RELATED அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள...