- ஐஸ்வர்யா ராஜேஷ்
- அர்ஜுன்
- அபிரமி வெங்கடாச்சலம்
- பிரவீன்ராஜா
- லோகு
- ராம்குமார்
- தங்கதுரை
- பேபி அனிகா
- குறும்புக்கார ராகுல்
- என்றழைக்கப்பட்டார்
- சையது
- ஜி.கே. ரெட்டி
- பி.எல். தேனப்பன்
- OAEK சுந்தர்
- பத்மன்
- வேலா
- ராமமூர்த்தி
- சரவணன் அபிமன்யு
- பரத் அசிவகன்
- ஜி. அருள்குமார்
- ஜி.எஸ். ஆர்ட்ஸ்
- தினேஷ் இலேட்சுமணன்
அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு, ராம்குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.ேக.சுந்தர், பத்மன், வேல.ராமமூர்த்தி நடித்துள்ள படம், ‘தீயவர் குலை நடுங்க’. சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, பரத் ஆசிவகன் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் 21ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை ஜி.எஸ் ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள்குமார் தயாரித்துள்ளார். தினேஷ் இலெட்சுமணன் எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், ‘இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
அந்த சம்பவத்தை இயக்குனர் சொன்னபோது எனக்கு உடல் நடுங்கியது. உண்மைக் கதையை திரையில் சொல்லும்போது, மக்கள் அதை மிகவும் நெருக்கமாக உணர்வார்கள். அவர்களுக்கு படம் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். கமர்ஷியலான திரையுலகில் இந்த உண்மைக் கதையை சொல்ல முயற்சித்த இயக்குனருக்கு நன்றி. இப்படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்ததற்கு காரணம், அர்ஜூன் சார்’ என்றார். பிறகு அர்ஜூன் கூறும்போது, ‘எனக்கு இது மிகவும் முக்கியமான படம். சட்டத்தை தாண்டி ஒரு நியாயம் இருக்கும். நியாயத்தை தாண்டி ஒரு தர்மம் இருக்கும். இறுதியில் தர்மமே வெல்லும் என்ற கருத்தை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது’ என்றார்.
