×

தீபிகாவுடன் நடிக்க விரும்பும் கிரித்தி

 

தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் கடந்த 2014ல் வெளியான ‘1: நெனொக்கடினே’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், கிரித்தி சனோன். பிறகு நாக சைதன்யா ஜோடியாக ‘தோச்சே’ என்ற படத்தில் நடித்தார். பிறகு இந்தியில் பிசியாக நடித்த அவர், தற்போது பாலிவுட்டின் வளர்ந்து வரும் ஹீரோயினாக மாறியுள்ளார். சமீபத்தில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ரூ.160 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில், கிரித்தி சனோனின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவரிடம், ‘நீங்கள் ஒரு படத்தில் லெஸ்பியன் ரோலில் நடித்தால், எந்த நடிகைக்கு ஜோடியாக நடிப்பீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கிரித்தி சனோன், ‘அப்படி ஒரு ரோலில் நடிக்க வேண்டும் என்றால், நான் தீபிகா படுகோனேவுடன் நடிப்பேன். ஏனென்றால், அவர் அழகானவர். என்னை சரியாக வழிநடத்துவார். இருவரும் சம அளவு உயரம் கொண்டவர்கள். உடல் அமைப்பும் ஒரேமாதிரி இருக்கும்’ என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

 

Tags : Kriti ,Deepika ,Kriti Sanon ,Mahesh Babu ,Naga ,Bollywood ,Dhanush ,Anand L. Rai ,
× RELATED உடலழகை எடுப்பாக காட்ட வற்புறுத்தினார்கள்: ராதிகா ஆப்தே கடும் தாக்கு