×

மும்பையில் அதிகாலை சகோதரியுடன் போலீஸ் ஸ்டேஷனில் நடிகை தஞ்சம்

மும்பை, டிச.23: பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவேத் மற்றும் அவரது சகோதரிகள் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவம் காரணமாக நேற்று அதிகாலை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த நடிகை உர்ஃபி ஜாவேத்தின் சகோதரியான டாலி ஜாவேத், சமீபத்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். மும்பை நகரின் பாதுகாப்புத் தன்மை குறித்து அவர் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த சூழலில், நேற்று அதிகாலை 5 மணியளவில் உர்ஃபி ஜாவேத் மற்றும் டாலி ஜாவேத் உள்ளிட்ட சிலர் மும்பையில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர்.

இதுகுறித்து உர்ஃபி ஜாவேத் இணையதளத்தில் பகிர்ந்துள்ள தகவலில், தாங்கள் காவல் நிலையத்திற்குள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘நாங்கள் வாழ்க்கையிலேயே மிகவும் பயங்கரமான அனுபவத்தை எதிர்கொண்டோம். அந்த அதிர்ச்சியில் இருந்து எங்களால் மீள முடியவில்லை. இரவு முழுவதும் ஒரு நிமிடம் கூட கண் அயரந்து தூங்கவில்லை’ என்று அவர் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இருப்பினும், அவர்களை அச்சுறுத்திய அந்தச் சம்பவம் என்ன என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Mumbai ,Bollywood ,Urfi Javed ,Dali Javed ,
× RELATED ‘ரெட்ட தல’க்கு நன்றி சொன்ன சித்தி இத்னானி