×

சீனாவின் பிரபல தொழிலதிபர்: ஜாக் மா மாயம்: ஆபத்தில் சிக்கியுள்ளாரா?

புதுடெல்லி: அமேசான், பிளிப்கார்ட் போல முன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான அலிபாபா நிறுவன தலைவர் ஜாக் மா(56). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன அரசாங்கம், வங்கிகள் மற்றும் அவற்றின் அணுகுமுறை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால், அலிபாபா நிறுவனம் மீது அரசு ஏகபோக எதிர்ப்பு விசாரணையை அறிவித்தது. மேலும் ஜாக் மா நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்தது. இந்நிலையில் தொழிலதிபர் ஜாக் மா திடீரென மாயமாகி உள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக அவர் பொது வெளியில் தோன்றவில்லை. சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா ஐக்கிய நாடுகள் மன்றத்துடனும், உலகின் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றி வருபவர்.  இதுவரை ஜாக் மா குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. அவர் ஆபத்தில் சிக்கியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. இது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது….

The post சீனாவின் பிரபல தொழிலதிபர்: ஜாக் மா மாயம்: ஆபத்தில் சிக்கியுள்ளாரா? appeared first on Dinakaran.

Tags : Jack Ma Mayam ,New Delhi ,Jack Ma ,Alibaba ,Amazon ,Flipkart ,China ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு