×

தீபிகா சொன்ன ஆரோக்கிய அட்வைஸ்

அட்லீ இயக்கும் பான்வேர்ல்ட் படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாகவும், இந்தியில் ‘கிங்’ என்ற படத்தில் ஷாருக்கான் ஜோடியாகவும் நடித்து வரும் தீபிகா படுகோன், திரையுலகில் 8 மணி நேரம் மட்டுமே வேலை என்பதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லியிருந்த கருத்து பலத்த விவாதங்களை ஏற்படுத்தியது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற படத்துக்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, 8 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்று நடிப்பேன் என்று சொன்னார். இதனால், அவரை ஒப்பந்தம் செய்யாத சந்தீப் ரெட்டி வங்கா, உடனே ‘அனிமல்’ திரிப்தி டிம்ரியை ஒப்பந்தம் செய்தார்.

தீபிகா படுகோனின் கருத்துக்கு ராஷ்மிகா மந்தனா உள்பட பல நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தீபிகா படுகோன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘திரையுலகில் 8 மணி நேரம் மட்டுமே வேலை என்பதை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதோடு, வாழ்க்கையில் மூன்று அத்தியாவசியங்களை அனைவரும் முன்னுரிமைப்படுத்த வேண்டும். அதாவது தூக்கம், உடற்பயிற்சி, சத்து நிறைந்த உணவு ஆகியவை சரியான விகிதத்தில் கிடைத்தால்தான் நாம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். திரையுலகிலுள்ள அனைவரும் ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.

Tags : Deepika ,Deepika Padukone ,Allu Arjun ,Shah Rukh Khan ,Sandeep Reddy Vanga ,
× RELATED சண்டை போட தயாராகும் சமந்தா