×
Saravana Stores

தற்கொலையை தடுக்கும் நோக்கில் 6 பூச்சு கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை: தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

சென்னை: அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. தற்கொலையை தடுக்கும் நோக்கில் 6 பூச்சு கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தற்காலிகமாக தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மோனோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட், புரபனோபாஸ் + சைபர்மெத்ரின், குளோரோபைரிபாஸ் + சைபர்மெத்ரின் மற்றும் குளோரோபைரிபாஸ் மருந்துகளுக்கு தமிழக அரசு தடிவித்தித்துள்ளதுபல்வேறுவிதமான ஆய்வுகள் நடைபெற்றதால் அடிப்படையில், தமிழகத்தில் இந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டு வேளாண்துறையானது மேற்கண்ட பூச்சு கொல்லி மருந்துககளை தற்காலிகமாக 60 நாட்களுக்கு தடைசெய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த 6 பூச்சிக்கொல்லிமருந்துகளும் விவசாயபயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டாலும், எளிதில் கிடைக்கக்கூடியவை என்பதால் இதனை தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் வாங்கி பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், தற்போது அந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தற்காலிகமாக தடைசெய்வதாக வேளாண்மைத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post தற்கொலையை தடுக்கும் நோக்கில் 6 பூச்சு கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை: தமிழக அரசு அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED பாம்பு கடி தொடர்பான சிகிச்சை...