×

ஐடி நிறுவன ஊழியர்களிடம் மெத்தபெட்டமைன் கொக்கைன் பறிமுதல்: 4 பேர் கைது

ஆலந்தூர்: மடிப்பாக்கம் பகுதியில் மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதை பொருள் விற்கப்படுவதாக, பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார், மடிப்பாக்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த 2 பேர், போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது, மெத்தபெட்டமைன் பயன்படுத்தி இருப்பது தெரிந்தது. விசாரணையில், வேளச்சேரியை சேர்ந்த அஸ்வின் பிர்னால்டு (24), ஆதம்பாக்ககத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (24) என்பதும், இவர்கள் அம்பத்தூரில் உள்ள மருந்து நிறுவனத்தில் வேைல செய்து வருவதும் தெரிந்தது.

இவர்கள் தங்களுடன் வேலை செய்யும் பிரகாஷ், திருச்சியை சேர்ந்த பிரதீப் ஆகியோர் மூலம் மெத்தபெட்டமைன் வாங்கி பயன்படுத்தியது தெரிந்தது. இதனையடுத்து, பிரதீப்பை கைது செய்து, 4 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர். இவர் கொடுத்த தகவலின் பேரில், பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவன ஊழியரான சர்புதீன் (24) என்பவரிடம் இருந்து, 23 கிராம் கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர், அஸ்வின் பிரனால்டு, கோபாலகிருஷ்னண், பிரதீப், சர்புதீன் ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஐடி நிறுவன ஊழியர்களிடம் மெத்தபெட்டமைன் கொக்கைன் பறிமுதல்: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : ALANTHUR ,Deputy Commissioner of ,Parangimalai ,Madipakkam ,Special Police Force ,Dinakaran ,
× RELATED சென்னை பரங்கிமலையில் ரயில் முன் மாணவி...