×

கடை உரிமையாளர் மீது தாக்குதல்: பாமக நிர்வாகி கைது

பல்லாவரம்: பொழிச்சலூர் பிரதான சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருபவர் சரண்ராஜ். இவர், கடந்த மாதம் 29ம் தேதி தனது கடையை திறந்து வழக்கமான விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, பொழிச்சலூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் சுரேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை சரண்ராஜ் கடையின் முன் நிறுத்தியதாக கூறப்படுகிறது.

அதனை எடுக்குமாறு கடையின் உரிமையாளர் சரண்ராஜ் கூறவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுரேஷ், தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கடையின் உரிமையாளர் சரண்ராஜை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த சரண்ராஜ் இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஏற்கனவே 3 பேரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த பாமக வார்டு உறுப்பினர் சுரேஷ் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் பதுங்கியிருந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்களை போலீசார் கைது செய்தனர்.

The post கடை உரிமையாளர் மீது தாக்குதல்: பாமக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : PAMA ,Pallavaram ,Charanraj ,Pozhichalur ,Bozhichalur ,PAMAK ,Dinakaran ,
× RELATED பல்லாவரம் அருகே பொழிச்சலூரில்...