×

உலககோப்பை கால்பந்து போட்டி எதிரொலியால் நாமக்கலில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 2 மடங்காக அதிகரிப்பு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப்பண்ணைகள் வீதம் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்படி மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு மாதத்திற்கு 2 கோடி முட்டைகள் வீதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் கத்தாருக்கு அதிகளவிலான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது கத்தார் நாட்டில் உலக கால்பந்துப் போட்டி நடைபெறுகிறது.உலககோப்பை கால்பந்து போட்டி எதிரொலியால் நாமக்கலில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 2 மடங்காக அதிகரித்துள்ளது. மாதந்தோறும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியான நிலையில் கடந்த மாதம் 3 மடங்கு அதிகரித்து 1.50 கோடி ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும், அதிகரித்து 2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி ஆகியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.   நாமக்கல் மண்டலத்தில் தினமும் 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கத்தார் நாட்டில் உலக கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மண்டலத்தில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 2 மடங்கு அதிகரித்துள்ளது. …

The post உலககோப்பை கால்பந்து போட்டி எதிரொலியால் நாமக்கலில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 2 மடங்காக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Qatar ,World Cup football ,Tamil Nadu ,
× RELATED பஸ் டிரைவரை கொன்று உடலை ஏரியில்...