×

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 43.43 சதவீதம் நீர் இருப்பு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 43.43 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 116 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 43 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,922 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரிக்கு நேற்று வினாடிக்கு 179 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 156 கன அடியாக சரிந்துள்ளது.

சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 500 மி. கனஅடி கொள்ளளவு உள்ள கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 313 மி. கனஅடி நீர் இருப்பு உள்ளது. 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் நீர்இருப்பு 89 மில்லியன் கன அடியாக உள்ளது. மழை காரணமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 30 கனஅடி நீர்வரத்து புழல் ஏரிக்கு 60 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 43.43 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

11.757 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட 5 ஏரிகளில் நீர் இருப்பு 5.106 டி.எம்.சி.யாக உள்ளது. செம்பரம்பாக்கம்- 45.71%, புழல் – 88.54%, பூண்டி-2.75%, சோழவரம் -10.73%, கண்ணன்கோட்டை-62.6% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 645 கனஅடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரே நாளில் 44 மில்லியன் கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு 1,666 மி.கனஅடியாக உள்ளது.

சென்னை குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 109 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

The post சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 43.43 சதவீதம் நீர் இருப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Lake Chozhavaram ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்