வேதனையில் இருக்கும்போது முடிவெடுக்காதீர்கள்: செல்வராகவன் அட்வைஸ்

இயக்குனர் செல்வராகவன் இப்போது நடிகராகவும் மாறிவிட்டார். சாணி காகிதம் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தத்துவங்களை உதிர்ப்பார். தற்போது வேதனையில் இருக்கும்போது எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள். என பதிவிட்டுள்ளார்.

Related Stories: