×

பெருந்துறை அருகே கீழ்பவானி பிரதான கால்வாய் உடைப்பை சீரமைக்க பணிகள் தொடக்கம்: பொக்லைன் இயந்திரம் 6 அடி ஆழத்தில் சிக்கியதால் பரபரப்பு..!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கீழ்பவானி பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பெருந்துறை வாய்க்கால் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி பிரதான கால்வாயில் 59-வது மைல் பகுதியில் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்களை தண்ணீர் மூழ்கடித்தது. உடனடியாக பவானி சாகர் அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட போதிலும் கால்வாயில் வந்து கொண்டிருந்த தண்ணீரால் 2 நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. நேற்று சேதப்பகுதியை பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி 10 தினங்களுக்குள் உடைப்பு சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்படும் என்றார். அதற்கேற்ப பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், தண்ணீர் முழுமையாக வடிந்தால் இன்று காலை சீரமைப்பு பணிகளை பொதுப்பணி துறையினர் தொடங்கினர். முதலில் உடைந்த கட்டுமானத்தை அகற்றும் பணி தொடங்கியது. இதற்காக கொண்டு வரப்பட்ட பொக்லைன் இயந்திரம் ஒன்று 6 அடி ஆழத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே விட்டு விட்டு பெய்யும் மழையும் பொருட்படுத்தாமல் சீரமைப்பு பணி தொடர்கிறது.   …

The post பெருந்துறை அருகே கீழ்பவானி பிரதான கால்வாய் உடைப்பை சீரமைக்க பணிகள் தொடக்கம்: பொக்லைன் இயந்திரம் 6 அடி ஆழத்தில் சிக்கியதால் பரபரப்பு..! appeared first on Dinakaran.

Tags : Kilpawani ,Perundurai ,Erode ,Erode district ,Perunthurai ,Dinakaran ,
× RELATED பெருந்துறையில் கிராம நிர்வாக அலுவலர்...