×

மீனாவுக்குப் போட்டியாக நைனிகா

கடந்த 1982 டிசம்பர் 10ல் வெளியான ‘நெஞ்சங்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், மீனா. வரும் 10ம் தேதியுடன் அவர் சினிமாவுக்கு வந்து 39 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், 2009 ஜூலை 12ல் அவருக்கும், வித்யாசாகர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. 2011 ஜனவரி 1ல் நைனிகாவுக்கு தாயான மீனா, தன்னைப்போல் மகளை சினிமாவில் நடிக்க வைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், 2016 ஏப்ரல் 14ல் வெளியான ‘தெறி’ படத்தில், விஜய் மகளாக அறிமுகமானார் நைனிகா. இந்த வாய்ப்பை மீனாவால் தவிர்க்க முடியவில்லை.

காரணம், விஜய்க்கு ஜோடியாக மீனா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. 2001ல் வெளியான ‘ஷாஜகான்’ படத்தில், ‘சரக்கு வெச்சிருக்கேன்’ என்ற பாடல் காட்சியில் மட்டும் மீனா விஜய்யுடன் இணைந்து ஆடியிருந்தார். ‘தெறி’யை தொடர்ந்து ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் நடித்த நைனிகா, தற்போது படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். 11 வயதாகும் அவர், மீனாவுக்கு போட்டியாக மீண்டும் எப்போது நடிக்க வருவார் என்று தெரியவில்லை.

Tags : Nainika ,Meena ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம்: ஆட்சியர்கள்,...