×

நிக்கிக்கு சசி அட்வைஸ்

சுந்தர்.சி உதவியாளர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம், ‘ராஜவம்சம்’. டிடி.ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் 49 நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ்  இசை அமைத்துள்ளார். இதில் நடித்துள்ள நிக்கி கல்ராணி கூறுகையில், ‘நான் கூட்டுக்குடும்பத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கவில்லை. அதை நினைத்து வருத்தப்படுகிறேன். ஆனால், இப்படத்தில் நடித்ததன் மூலம் நிஜமாகவே ஒரு மிகப்பெரிய வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த திருப்தி கிடைத்துள்ளது.

சசிகுமார் தனது அனுபவ நடிப்பின் மூலம் சில விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார். அவரது அட்வைஸ் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. இப்படத்தை தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று டைரக்டர் கதிர்வேலு பிடிவாதமாக இருந்தார். அப்போதுதான் கூட்டுக்குடும்பம் சம்பந்தமான கதையை குடும்பம், குடும்பமாக மக்கள் பார்த்து ரசிப்பார்கள் என்று சொன்னார். வரும் 26ம் தேதி படம் வெளியாகிறது’ என்றார்.

Tags : Nikki ,
× RELATED டிரம்புக்கு அதிபராக மீண்டும் பதவி...