×

தடகள போட்டியில் பதக்கம் மாணவர்களுக்கு பாராட்டு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பெரியார் நகரில் அரசு உதவி பெறும் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியை சேர்ந்த 22 மாணவர்கள் திருவண்ணாமலையில் அண்மையில் நடந்த மாநில அளவிலான குடியரசு தின விழா தடகளப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், 17 வயதிற்குட்பட்ட 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பி.பிரதாப் பஸ்வான், சி.யோக சுந்தர், பா.சுபாஷ், சி.லோகேஸ்வரன் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர். இதேபோல், 14 வயதிற்குட்பட்ட 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற லோ.அர்ச்சனா 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.34 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. பள்ளியின் தாளாளர் சு.சுந்தர் தலைமையில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் பஞ்சநாதன், உதவி தலைமை ஆசிரியர் சுப்பையன், உடற்கல்வி இயக்குனர் ரீ.மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்….

The post தடகள போட்டியில் பதக்கம் மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Thiruvotthyur ,Setiyar secondary school ,Thiruvottur Periyar ,
× RELATED கடலில் மூழ்கி பெண் பலி; 2 சிறுவர்கள் உயிர் தப்பினர்