மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் சூரி காம்போ: 'டான்' படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள்...!

சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயனின் 19 வது திரைப்படம் "டான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இத்திரைபடத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதன் அதிகாரபூர்வ வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது லைகா நிறுவனம். இந்நிலையில் இந்த அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த  ஹீரோயின் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க தற்போது முன்னணி காமெடியனாக சூரி இந்த படத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் சூரி காம்போவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற பல படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த காம்போ மீண்டும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Related Stories: