×

சரித்திர கதையில் நிதி அகர்வால்..!

இந்தியில் அறிமுகமான நிதி அகர்வால், பிறகு தெலுங்கில் நடித்தார். இந்நிலையில் அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த பொங்கலுக்கு ஜெயம் ரவியுடன் நடித்த பூமி படமும், சிம்புவுடன் நடித்த ஈஸ்வரன் படமும் ரிலீசானது. இவ்விரு படங்களும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கொடுக்கவில்லை என்றாலும், மேலும் சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். தற்போது மகிழ்திருமேனி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கும் அவர், தற்போது ஒரு தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்தை வானம் கிரிஷ் இயக்குகிறார். பவன் கல்யாண் நடிக்கும் இதன் படப்பிடிப்பு பாதி முடிந்து விட்டது. ஆனால், ஹீரோயின் யார் என்பதில் குழப்பம் நீடித்தது. இது சரித்திர கதை கொண்ட படம் என்பதால், அந்தக்கால சாயல் கொண்ட நடிகையை தேடி வந்தனர். தற்போது பவன் கல்யாண் ஜோடியாக நிதி அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் நடிப்பது குறித்து கேட்டபோது, ‘வரலாற்று கதையில் நடிக்கிறேன். எனது கேரக்டர் பற்றி வெளியே  சொல்ல  முடியாது’ என்றார் நிதி.

Tags : Nithi Agarwal ,
× RELATED சிம்புவுக்கு தங்க மனசு: நடிகை நிதி அகர்வால் பளிச்