×

ஜல்லிக்கட்டு காளைகள் குழந்தைகளை போல பராமரிக்கப்படுகிறது: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்

டெல்லி: தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு அதிகாரமுண்டு என வாதிட்டார். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கலாச்சாரம் உள்ளதுபோல், தமிழக கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டதாக எடுத்துக் கூறப்பட்டது.* உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்விகள்ஜல்லிக்கட்டு முடிந்த பிறகும் காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டில் மனித உயிர்கள் பலியாவதாக மனுதாரர்கள் தரப்பு தெரிவித்துள்ளது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் விசாரணை நடந்து வருகிறது. * தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் ஜல்லிக்கட்டு காளைகள் குழந்தைகளை போல பராமரிக்கபப்டுகிறது தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும் என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார். கடும் விதிமுறைகள் மட்டுமின்றி பல நடைமுறைகளை பின்பற்றியே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என அவர் கூறினார். ஜல்லிக்கட்டு முடிந்த பிறகும் காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த தயார் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளார். எல்லா செயல்பாடுகளிலும் எதோ ஒரு வகையில் மனித உயிர்கள் பலியாகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வாகனம் ஓட்டும் போது, பழங்கள் இடிந்து விழும்போது என எல்லா இடங்களிலும் மனித வாழ்கை முடிகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக தேவைப்பட்டால் கூடுதல் விதிகளை நீதிமன்றமே வகுக்கலாம் என்று தமிழ்நாடு அரசு வாதம் செய்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு புகைப்படங்களின் அடைப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியுமா என்று பீட்டாவுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  பீட்டாவின் வாதங்களை நாளையும் தொடர நீதிபதிகள் உத்தரவு அளித்து விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்….

The post ஜல்லிக்கட்டு காளைகள் குழந்தைகளை போல பராமரிக்கப்படுகிறது: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Tamil Nadu government ,Supreme Court ,Delhi ,PETA ,
× RELATED போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு...