×

திருவள்ளூர் அருகே போளிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியது

திருவள்ளூர்: திருவள்ளூர்  அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கத்தில் உள்ள சித்தேரி நிரம்பியது.  இதனால் உபரிநீர் வெளியேறியதில் போளிவாக்கம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.  இதனால் திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாக திருவள்ளூர் மாவட்டத்தை  சேர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் தொழிற்சாலை வாகனங்கள்,  தனியார், அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் போன்ற  இதர வாகனங்களும் இரு புறமும் மெதுவாக இயக்கப்படுகின்றன. இதனால்  தரைப்பாலத்தை கடக்க மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுமார் 100 க்கும்  மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.ஊத்துக்கோட்டை, பூண்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதனால் பூண்டி ஏரியிலிருந்து நேற்று மாலை 100 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் வழித்தடத்தில் உள்ள மெய்யூர் தரைப்பாலம் இன்று அதிகாலை துண்டிக்கப்பட்டது. இதனால் திருவள்ளூர்-மெய்யூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மெய்யூர், ஆவாஜிபேட்டை, வெம்பேடு, செம்பேடு, வெங்கல், மாளந்தூர், எரையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம், அரும்பாக்கம், மேலானுர், மூலக்கரை உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது….

The post திருவள்ளூர் அருகே போளிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Chitteri ,Kadambathur Union Policavakam ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்