×

 டிக்கெட் பரிசோதகர் சென்னை பயணி மோதல்

அரக்கோணம்: சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த சில தினங்களுக்கு முன் முன்பதிவு பெட்டியில் சென்னையை சேர்ந்த வாலிபர் பயணம் செய்தார். அப்போது, டிக்கெட் பரிசோதகர், அவரிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். அதற்கு வாலிபர், செல்போனில் இருந்த ஆன்லைன் டிக்கெட்டை காட்டினார். அதில் இருந்த பெயரும், வாலிபரின் பெயரும் மாறி இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் டிக்கெட் பரிசோதகர், ‘வேறு ஒருவரின் டிக்கெட்டில் பயணிக்கிறாயா?’ என சந்தேகத்துடன் கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர், ‘ஆன்லைனில் அவசர அவசரமாக பதிவு செய்தேன், பெயர் மாற்றத்தில் தவறு கண்டுபிடிக்க முடியவில்லை’ எனக்கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.அதற்குள் ரயில் அரக்கோணம் வந்துவிட்டதால், அந்த வாலிபரை டிக்கெட் பரிசோதகர், கீழே இறக்கி ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் ஒப்படைத்தார். பின்னர் ரயில் புறப்பட்டு காட்பாடிக்கு சென்றது. மேலும், வாலிபர் ஒருவர் தன்னிடம் தகராறு செய்ததாக காட்பாடி ரயில்வே போலீசில் டிக்கெட் பரிசோதகர் புகார் செய்துள்ளார். அந்த புகார் அரக்கோணம் ரயில்நிலையத்துக்கு மாற்றப்பட்டு, புகாரின் பேரில் போலீசார் வாலிபரிடம் நேற்று விசாரணை நடத்தி ரூ.500 அபராதம் விதித்தனர். இதற்கிடையில், ரயில் பயணத்தின்போது, தன்னிடம் டிக்கெட் பரிசோதகர்கள் அனைவரும் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், அதுதொடர்பான வீடியோ தன்னிடம் உள்ளதாகவும் அரக்கோணம் போலீசில் சம்பந்தப்பட் வாலிபர் புகார் செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post  டிக்கெட் பரிசோதகர் சென்னை பயணி மோதல் appeared first on Dinakaran.

Tags : Ticket ,Chennai ,Passenger Confrontation ,Westcoast Express ,Mangaluru ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...