×

இசை பயிலும் அக்‌ஷரா

இந்தியில் ஷமிதாப் படத்தில் வலிமையான கேரக்டர் ஏற்று அமிதாப் பச்சன், தனுஷ் ஆகியோருடன் நடித்த அக்‌ஷரா ஹாசன், பிறகு தமிழில் அஜித் குமாரின் விவேகம் படத்தில் நடித்தார். இதையடுத்து தன் தந்தை கமல்ஹாசன் இயக்கி நடித்த சபாஷ் நாயுடு படத்தில் நடிக்காமல், உதவி இயக்குனராக மட்டும் பணிபுரிந்தார். சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்ட நிலையில், தந்தை நிறுவனத்தில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்தில், நாசர் மகன் அபி ஹசனுடன் நடித்தார். 

தற்போது ராஜா ராமமூர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கும் அவர், கதைப்படி கர்நாடக இசை பாடகி கேரக்டர் ஏற்றுள்ளதால், முறைப்படி கர்நாடக இசை கற்றுக்கொள்ள தொடங்கியுள்ளார். படத்தில் ஏற்கும் கேரக்டரை நிறைவாக செய்ய, அந்த கேரக்டருக்கு நியாயம் செய்யும் வகையில், அதுபற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று தந்தை சொன்ன ஆலோசனைப்படி கர்நாடக இசை கற்றுக்கொள்கிறார் அக்‌ஷரா.

Tags : Akshara ,
× RELATED மாளவிகாவின் ‘ஹரோம் ஹரா’