சென்னை: சென்னை கோயம்பேடு பூக்கடை மார்க்கெட்டில் மல்லிகைப்பூ, கனகாம்பரம் போன்ற பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்கள் மட்டும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுவது வழக்கம். அதேபோல் மழை மற்றும் பனி காலங்களில் பூக்களின் விலை உச்சத்தில் இருக்கும். இந்நிலையில் தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாகவும் பனிபொழிவின் காரணமாகவும் பூக்களின் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்கெட்டிற்கு பூக்களின் வரத்தும் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது. கோயம்பேடு பூக்கடை மார்க்கெட்டில் முல்லை, செவ்வந்தி, சம்பங்கி, அரும்பு, மல்லி உள்ளிட்ட பலவகையான பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கோயம்பேடு பூக்கடை மார்க்கெட்டில் நாள்தோறும் 25 முதல் 30 டன்கள் அரை பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் மல்லிகைப் பூ கிலோ ரூ.700லிருந்து ரூ.1,700 ஆக அதிகரித்துள்ளது. கனகாம்பரம் ரூ.600க்கும், முல்லை ரூ.700க்கும் விறபனையாகிறது. கடந்த வாரத்தை காட்டிலும் பூக்களின் விலை இந்த வாரம் சற்று உயர்ந்து காணப்படுகிறது….
The post மழைப்பொழிவு, பனிபொழிவின் காரணமாக கோயம்பேடு பூக்கடை மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு appeared first on Dinakaran.