×

பேட்மேன் ஹீரோவுக்கு கொரோனா

பேட்மேன் படத்தின் ஹீரோ ராபர்ட் பேட்டிசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் நடித்து வந்த பேட்மேன் படத்தின் படப்பிடிப்பு உடனே நிறுத்தப்பட்டது. இப்படத்தின் ஷூட்டிங் கொரோனா ஊரடங்கிற்கு முன்பே நடந்து வந்தது. மீதமுள்ள 10 சதவீத படப்பிடிப்பை நடத்த இங்கிலாந்து அரசிடம் அனுமதி பெற்று, கடந்த 1ம் தேதி முதல் ஆஸ்டின் நகரில் நடந்து வந்தது. இந்தநிலையில் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டது. குழுவிலுள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. 

பாதிக்கப்பட்டவர் ஹீரோ ராபர்ட் பேட்டிசன் என்ற தகவல் வெளியானது. கடந்த மாதத்தின் இறுதியில் ராபர்ட் பேட்டிசன் விளம்பர படம் ஒன்றில் நடித்தார். அந்தக் குழுவிலுள்ள ஒருவரிடம் இருந்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து ராபர்ட் பேட்டிசன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Corona ,Batman Hero ,
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!