சாயிஷாவின் குத்துச்சண்டை

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து, ஜெயம் ரவி ஜோடியாக வனமகன் என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமானவர் சாயிஷா. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர், தன்னுடன் கஜினிகாந்த் என்ற படத்தில் சேர்ந்து நடித்த ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு சென்னையில் குடியேறினார். பிறகு காப்பான் படத்தில் சூர்யா, ஆர்யாவுடன் இணைந்து நடித்தார். இந்நிலையில், திருமணத்துக்கு பிறகு ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்துள்ள டெடி என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. யுவரத்னா என்ற கன்னடப் படத்திலும் சாயிஷா நடித்து வருகிறார். இதற்கிடையே ஆர்யாவுடன் இணைந்து குத்துச்சண்டை கற்றுக்கொள்கிறார்.

பா.ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா என்ற படத்தில், குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார் ஆர்யா. இது வடசென்னையில் நடக்கும் சூதாட்ட குத்துச்சண்டை பற்றிய கதை என்று தெரிகிறது. இதற்காக ஆர்யாவும், கலையரசனும் முறைப்படி குத்துச்சண்டை பயிற்சி பெறுகின்றனர். ஆரம்பத்தில் குத்துச்சண்டை அகாடமிக்கு ஆர்யாவுக்கு துணையாக வந்து கொண்டிருந்த சாயிஷா, தற்போது குத்துச்சண்டையில் ஆர்வம் ஏற்பட்டு கற்றுக்கொள்ள தொடங்கியுள்ளார். சாயிஷா பாரம்பரிய மற்றும் மேற்கத்திய

நடனத்தை முறைப்படி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>