×

அக்‌ஷரா இயக்கத்தில் கமல்

இந்தியில் உதவி இயக்குனராக பணியாற்றிய அக்‌ஷரா ஹாசன், அமிதாப் பச்சனுடன் தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தில் நடிகையாகி விட்டார். பிறகு அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்த அக்‌ஷரா, கமல்ஹாசன் இயக்கி நடித்த சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில், திடீரென்று படம் கைவிடப்பட்டது. எனவே, கமல் தயாரிப்பில் விக்ரம், நாசர் மகன் அபி ஹசன் நடித்த கடாரம் ெகாண்டான் படத்தில் நடித்தார். தற்போது அக்னிச் சிறகுகள் படத்தில் நடிக்கிறார். தற்போது படம் இயக்கும் சூழ்நிலை அமையாததால், மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார். பிற்காலத்தில் கமலை இயக்குவீர்களா என்றபோது, ‘அவரை இயக்க வேண்டும் என்ற எண்ணம் பல இயக்குனர்களுக்கு இருக்கும்போது, அவரது மகளான எனக்கு இருக்காதா’ என்று சிரித்தார். 

Tags : Kamal ,Akshara ,
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...