×

படம் தயாரிக்கும் டாப்ஸி?

டாப்ஸி முழுநீள காமெடி கதையில் நடித்ததில்லை என்ற குறையை நீக்கும் விதத்தில் அவர் ஒப்பந்தமான படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் மகன் தீபக் இயக்கும் படத்தில் நடிக்கும் டாப்ஸி கூறுகையில், ‘ஒரு வருடத்துக்கு முன் கதை கேட்டேன். பிறகு இந்தியில் சில படங்களில் நடிக்கும்போது, இந்த கதையை முழுமையாக மறந்துவிட்டேன். ஆனால், நான்தான் நடிக்க வேண்டும் என்பதில் இயக்குனர் பிடிவாதமாக இருந்தார். என்னுடன் விஜய் சேதுபதி, யோகி பாபு நடிக்கின்றனர்’ என்ற அவர், இந்தி படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலை மறுத்துள்ளார். ‘நான் எப்போதுமே படம் தயாரிப்பது பற்றி யோசித்தது இல்லை. பிறகு எப்படி தகவல் வெளியாகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது’ என்றார்.

Tags : Topsy ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி