×

குஜராத் முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 4.92% வாக்குகள் பதிவு

காந்திநகர்: குஜராத் முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 4.92% வாக்குகள் பதிவாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்கு பதிவு தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது. குஜராத் அருகே உள்ள வத்வான் கிராமத்தில் காலையில் தொடங்கிய வாக்கு பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. மக்கள் நீண்ட வரிசையில் இருந்து தங்களது வாக்கை பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். மக்கள் அடையாள அட்டையை காண்பித்ததற்கு பின் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல சுந்திரநகர் ராஜ்போட்டில் முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்று கொண்டு இருக்கிறது. 89 சட்டசபை தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்கு பதிவு நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் 9 மணியளவில் 4.92% வாக்கு பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 89 சட்டசபை தொகுதிகளிலும் 718 ஆண் வேட்பாளர்களும், 70 பெண் வேட்பாளர்களும் இருக்கின்றனர். 18 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் 5 லட்சம் பேர் மற்றும் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் 49 லட்சம் பேர் 30 முதல் 40 வயது வரை 65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 89 சட்ட பேரவை தொகுதிகளில் சுமார் 25,430 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. குஜராத் சட்ட பேரவையை பொறுத்தவரை 182 சட்ட பேரவை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவானது தற்போது தொடங்கியுள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி இன்று 3.30 மணியளவில் அகமதாபாத்தில் 2 கட்ட வாக்கு பதிவு நடைபெற கூடிய இடங்களில் பேரணியில் பிரதமர் பங்கேற்கிறார். 2-ம் கட்ட வாக்குப்பத்தி டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற இருக்கிறது.       …

The post குஜராத் முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 4.92% வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Gujarat Assembly Elections First ,Gandhinagar ,Gujarat assembly elections ,Assembly ,Gujarat ,Gujarat Legislative Assembly Elections ,Dinakaran ,
× RELATED சொந்தமாக கார் கூட இல்லை அமித் ஷாவுக்கு...