×

நிக்கி கல்ராணிக்கு கொரோனா

டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மரகத நாணயம், கலகலப்பு 2 உள்பட பல மொழி படங்களில் நடித்தவர், நிக்கி கல்ராணி. கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் அவர் கூறியதாவது:கடந்த வாரம் நடந்த பரிசோதனையில், எனக்கு லேசான கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. காய்ச்சல், தொண்டை வலி மற்றும் வாசனை, சுவை உணர்வு இல்லாதது போன்ற அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் ஆரோக்கியமானவள் என்பதால் கொரோனாவுக்கு பயப்படவில்லை. விரைவில் இதிலிருந்து மீள்வேன். முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள். மன அழுத்தம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர் உதவியை நாடுங்கள். உடல்நலமும், மனநலமும் மிகவும் முக்கியம்.

Tags : Corona ,Nikki Caulfield ,
× RELATED கொரோனா காலகட்டத்தில் உயர்த்தப்பட்ட...