×

சூரரை போற்று படத்தில் 12 இடத்தில் மியூட்: சென்சார் நடவடிக்கை

சூரரை போற்று படத்தில் 12 இடத்தில் வசனங்களில் மியூட் தந்துள்ளது சென்சார் போர்டு. சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்துள்ள படம் சூரரை போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளிவராமல் சிக்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன் படம் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், ஆங்காங்கே வரும் வசனங்களில் தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தி இருப்பதாக ஆட்சேபணை தெரிவித்தனர். 

அந்த வார்த்தைகளை மியூட் செய்தால் படத்துக்கு யு சான்றிதழ் தருவதாகவும் கூறினர். இதையடுத்து அந்த வசன காட்சிகளை மியூட் செய்ய சுதா கொங்கரா ஒப்புக்கொண்டார். படத்தில் மொத்தம் 12 இடங்களில் இதுபோல் வசனத்தில் மியூட் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags : place ,
× RELATED திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாள்