×

பாடகி ஆனார் அதிதி

காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ைசக்கோ படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதரி. இவர் நல்ல குரல் வளம் கொண்டவர். பல்வேறு நிகழ்ச்சிகளில் சொந்த குரலில் பாடி அசத்தியுள்ளார். இந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் முதல்முறையாக பாடகி அவதாரம் எடுத்துள்ளார். அதுவும் தமிழ் படத்தில். வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ஜெயில். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். புதுமுகம் அபர்ணதி ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையும் அமைத்துள்ளார். இந்த படத்தில் காத்தோடு காத்தானேன் என்ற பாடல் இடம்பெறுகிறது. இந்த பாடலைத்தான் அதிதி ராவ் ஹைதரி பாடியுள்ளார். அவருடன் சேர்ந்து தனுஷ் பாடியிருக்கிறார். நாயகன், நாயகி இணைந்து மற்றொரு நட்சத்திரங்களுக்காக இந்த படத்தில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. பவர் பாண்டி படத்துக்கு பிறகு தனுஷ் இயக்கி வந்த படத்தில் அதிதி ராவ் ஹைதரிதான் ஹீரோயின். திடீரென அந்த படம் கைவிடப்பட்டது. இப்போது இருவரும் இணைந்து ஜெயில் படத்தில் பாடியிருப்பது சிறப்பம்சம் என்கிறது படக்குழு.

Tags : Aditi ,singer ,
× RELATED பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா அதிதி ராவ்? சமூக வலைத்தளத்தில் காரசாரம்