×

செல்வராகவனின் தீராத ஆசை

மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க கதை எழுதியுள்ள செல்வராகவன், சமீபகாலமாக இணையதளங்கள் மற்றும் யுடியூப் சேனல்களுக்கு அடிக்கடி பேட்டி கொடுத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில், “முழுநீள காமெடி படம் இயக்குவீர்களா என்று என்னிடம் சிலர் கேட்கின்றனர். அதுபோல் ஒரு படம் பண்ண முடியாது என்று சொல்ல மாட்டேன். ஆனால், நான் இயக்கும் படத்தில் காமெடியும் சேர்ந்து வரும்படி ஸ்கிரிப்ட் அமைத்திருப்பேன். எல்லோரும் என்னை ரொம்ப சீரியசான ஆள் என்று நினைக்கிறார்கள். எப்போதும் நான் ஏதாவது ஒரு யோசனையில் மூழ்கியிருப்பதால் அப்படி சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். லாக்டவுனில் கிடைத்த ஓய்வு நேரத்தில் சில கதைகள் எழுதினேன். டி.வி பார்க்க அதிக நேரம் கிடைத்தது. நான் காமெடிக்கு மிகப் பெரிய ரசிகன். அதிலும் கவுண்டமணியின் காமெடி ரொம்ப பிடிக்கும். எனக்கு ஒரு தீராத ஆசை இருக்கிறது. அது என்னவென்றால், கவுண்டமணி சாரை ஒருமுறையாவது நேரில் பார்த்து பேச வேண்டும் என்பது. இதுவரை அவர் எல்லாவிதமான காமெடியையும் செய்துவிட்டார். எனவே, அவரை சந்திக்க வேண்டும்” என்றார்.

Tags : Selvaraghavan ,
× RELATED வைகோ மீதான வழக்கு 4 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு