×

தொடர்ந்து நடிக்க மியா முடிவு

சினிமாவில் பிசியாக இருக்கும் நேரத்தில் திருமணம் செய்துகொள்ளும் நடிகைகள் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளார், மியா ஜார்ஜ். தமிழில் அமர காவியம், இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, வெற்றிவேல், ரம், எமன் ஆகிய படங்களை தொடர்ந்து கோப்ரா படத்தில் நடித்து வரும் அவர், மலையாளத்தில் சில படங்களில் ஒப்பந்தமாகி இருந்தார் என்றாலும், அவரது வீட்டில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினர். இதையடுத்து தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்துகொள்ள மியா கிரீன் சிக்னல் கொடுத்தார். இதையடுத்து நிச்சயதார்த்தம் நடந்தது. இதுகுறித்து மியா தரப்பில் கேட்டபோது, “கொரோனா வைரஸ் தொற்று கேரளாவில் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. 

எனவே, திருமணத்தை நிச்சயம் செய்த ஆறு மாதத்துக்குள் நடத்த வேண்டும் என்று குடும்பத்தினர் முடிவு செய்துள்ளோம். எனவே, வரும் டிசம்பர் மாதத்துக்குள் திருமணத்தை நடத்தி முடித்துவிடுவோம். கண்டிப்பாக மீண்டும் மியா சினிமாவில் நடிப்பார். கணவர் வீடு கொச்சியில் இருக்கிறது. அங்கு மியா குடியேறுவார். எனவே, தொடர்ந்து அவர் சினிமா, டி.வி மற்றும் வெப்தொடரில் நடிப்பார்” என்றனர்.

Tags : Mia ,
× RELATED தொழிலாளியிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது