×

திருமணம், கருக்கலைப்பு என பரபரப்பு; வாலிபர் மீது லாவண்யா புகார்

பிரம்மன், மாயவன் படங்களில் நடித்திருக்கும் நடிகை லாவண்யா திரிபாதி தெலுங்கில்  பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். வாலிபர் சுனிசித் என்பவர் மீது சைபர்  கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். சுனிசித் என்பவர் யூ  டியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு விவகாரமான  விஷயங்களை சொல்லியிருக்கிறார். அவர் கூறும்போது, ‘சிலர் என்னை  ஏமாற்றி விட்டார்கள்.

என்னிடம் வாய்ப்பை பெற்று பின்னர் பெரிய ஸ்டார்கள் ஆகிவிட்டனர். என்னை தியாக நட்சத்திரம் என்றுதான் மக்கள் அழைக்கிறார்கள். நடிகைகள் லாவண்யா திரிபாதி, தமன்னாவுடன் எனக்கு காதல் உண்டு. கடந்த 2015ம்  ஆண்டு லாவண்யாவை நான் மணந்துகொண்டேன். பின்னர் கருத்து வேறுபாடால்  பிரிந்துவிட்டோம். அதனால் இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களை அழித்துவிட்டேன்.

குறிப்பிட்ட நடிகை 3 முறை கருக்கலைப்பு செய்திருக்கிறார்’  என்று அந்த நபர் தெரிவித்திருந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சியில்  ஆழ்த்தியது. இதுபற்றி அறிந்ததும் லாவண்யா திரிபாதி ஷாக் ஆனார். ‘சுனிசித் என்பவர் யூ டியூபில் என்னைப்பற்றி தவறான தகவல்கள் பரப்பி  வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சைபர் கிரைம்  போலீசில் புகார் அளித்தார்.

வழக்கை பதிவு செய்த போலீசார் சுனிசித்தை தேடி  வருவதுடன் அவரது பேட்டியை எடுத்து ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் மீதும்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் லாவண்யா திரிபாதி உடனடியாக புகார் அளித்த நிலையில் தன்னை காதலிப்பதாக தெரிவித்த சுனிசித் மீது தமன்னா என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : plaintiff ,Lavanya ,
× RELATED நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்: மனைவி...