×

4-வது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்?

தளபதி விஜய் மாஸ்டர் படத்தை அடுத்து 65-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 9-ம் தேதிக்கு வர உள்ளது. இந்நிலையில் தளபதி65 படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 4-வது முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மீண்டும் விஜய்யுடன் கைகோர்க்கிறார். இப்படம் வருகிற 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை குறி வைத்து உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

Tags : Vijay ,AR Murugadoss ,
× RELATED விசிலடிக்க வைத்த விஜய்