- ஆர் முருகதாஸ்
- Rashmika
- சல்மான் கான்
- மும்பை
- ரஜினிகாந்த்
- நயன்தாரா
- சிவகார்த்திகேயன்
- ருக்மணி வசந்த்
- ஆர் முருகதாஸ்
- அனிருத்
- சென்னை
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
மும்பை: ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘தர்பார்’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன், கன்னட நடிகை ருக்மணி வசந்த் ஜோடி சேர்ந்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்திப் படத்துக்கு ‘சிக்கந்தர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சல்மான்கான் ேஜாடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக படக்குழு நேற்று அறிவித்துள்ளது.
சஜித் நாடியத்வாலா தயாரிக்கும் இப்படம், அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையன்று திரைக்கு வரும் என்று சல்மான்கான் தெரிவித்துள்ளார். தெலுங்கில் ரவிதேஜா நடித்து ஹிட்டான படம், ‘கிக்’. அதன் இந்தி ரீமேக்கில் சல்மான்கான் நடித்திருந்தார். அதன் அடுத்த பாகமான ‘கிக் 2’ என்ற படமே ‘சிக்கந்தர்’ பெயரில் உருவாக இருக்கிறது என்று பாலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
The post ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’- சல்மான்கான் ஜோடியாக ராஷ்மிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.