×

சினிமா நடிகர் வீட்டில் கொள்ளை நேபாளிகளிடமிருந்து 150 சவரன் மீட்பு: தொடர்ந்து போலீசார் விசாரணை

ஆலந்தூர்: நந்தம்பாக்கத்தில் சினிமா நடிகர் வீட்டில் கொள்ளையடித்த நேபாளிகளிடமிருந்து 150 சவரன் நகையை போலீசார் மீட்டனர். நந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனியை சேர்ந்தவர் நடிகர் ராதாகிருஷ்ணன் (63). இவரது மனைவி ராஜி 10ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டின் பின் பக்க கதவு வழியாக உள்ளே புகுந்த 2பேர் கத்தியை மிரட்டி கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த200 சவரன் நகைகள் ரூ.2லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து நந்தம்பாக்கம் போலீசார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராதாகிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்த நேபாள நாட்டை சேர்ந்த ரமேஷ் (24) என்பவர் தனது நண்பர்கள் மூலம்  கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 8 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் நேபாள் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் நேபாளத்தில் முகாமிட்ட போலீசார் 3 கொள்ளையர்களை கைது செய்துள்ளனர். மேலும் ராதாகிருஷ்ணன் வீட்டில் காவலாளியாக பணிபுரிந்த ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான குண்டுகிருஷ்ணா, கரன் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 150 சவரன் நகையை மீட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில் இந்த சம்பவத்தில் குண்டு கிருஷ்ணா என்பவர் இந்த கொள்ளை திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளதும், காவலாளி ரமேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post சினிமா நடிகர் வீட்டில் கொள்ளை நேபாளிகளிடமிருந்து 150 சவரன் மீட்பு: தொடர்ந்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Alandur ,Nantambakkam ,Nandambakkam ,Tibans Colony ,Dinakaran ,
× RELATED ஆசர்கானா சுரங்க நடைபாதையை வாகனங்கள்...