கட்டிப்பிடி, கைகுலுக்கலுக்கு நடிகர், நடிகைகள் டாட்டா

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தும்போது கைகுலுக்கியும், கட்டிப்பிடித்தும், முத்தம் பகிர்ந்தும் நலம் விசாரித்துக் கொள்வது வழக்கம். கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த மேற்கத்திய கலாசாரத்துக்கு குட்பை சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவரை அறிமுகம் செய்யும்போது தற்போது கைகூப்பி வணக்கம் தெரிவித்துக்கொள்கின்றனர்.

தமிழர்களின் இந்த கலாசாரம் பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை பரவி உள்ளது. இதுதவிர ரஜினியின் அண்ணாத்த, கமலின் இந்தியன் 2, அஜீத்தின் வலிமை, விக்ரமின் ேகாப்ரா, கார்த்தியின் சுல்தான், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், சிம்புவின் மாநாடு, தனுஷின் கர்ணன் உள்ளிட்ட எல்லா படங்களின் படப்பிடிப்பும் கொரோனா பாதிப்பையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி கண்டுகொள்ளாமல் நடத்தப்படும் மற்ற படங்களின் படப்பிடிப்புக்கும் நாளை முதல் பெப்சி தடை விதித்துள்ளது. விஜய் நடிக்கும் மாஸ்டர், சூர்யா நடிக்கும் சூரரைப்போற்று ஆகிய படங்களின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெரும்பாலான நடிகர், நடிகைகள் கோரிக்கையாக இணைய தள பக்கங்களில் தெரிவித்திருக்கின்றனர்.

நடிகர் ஜீவா கூறும்போது,’கொரோனா வைரஸ் தொற்றால் சினிமாவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் இந்த பீதி பெரிதாக இல்லை. அதற்கு காரணம் இஞ்சி, மஞ்சள், பூண்டு போன்றவற்றை உணவு பொருட்களில் சேர்த்துக்கொள்வதுதான். நம் பழங்கால பழக்க வழக்கங்கள் திரும்பி வந்துக்கொண்டிருக்கின்றன’ என்றார்.

Related Stories:

>