சீனியர் நடிகருக்கு ஜோடியாகும் திரிஷா

ரஜினிகாந்த்துடன் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் திரிஷா மனதில் இருந்து வந்தது. அந்த ஏக்கம் பேட்ட படத்தின் மூலம் தீர்ந்தது. ரஜினிக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்தார். தமிழில் நடித்ததுபோலவே தெலுங்கு படங்களிலும் திரிஷா மும்முரமாக நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக அவர் தெலுங்கு படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருக்கிறார். தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

கடந்த 2015ம் ஆண்டு லயன் என்ற தெலுங்கு படத்தில் என்.டி.பாலகிருஷ்ணா வுடன் நடித்திருந்த திரிஷா அதன்பிறகு தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை. 5 வருடத்துக்கு பிறகு தற்போது மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார். சீனியர் ஹீரோ சிரஞ்சீவி நடிக்கும் ஆசார்யா படத்தில் அவருடன் இணைகிறார்.

ஏற்கனவே சிரஞ்சீவியுடன் கடந்த 2006ம் ஆண்டு ஸ்டாலின் என்ற படத்தில் நடித்திருந்தார் திரிஷா. 15 வருடத்துக்கு பிறகு தற்போது மீண்டும் சிரஞ்சீவியுடன் நடிக்க உள்ளார். இதற்கிடையில் தமிழில் பொன்னியின் செல்வன், சுகர், ராங்கி, கர்ஜனை,  படங்களில் நடித்து வருகிறார். திரிஷா நடிப்பில் பரமபதம் விளையாட்டு என்ற படம் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

Related Stories:

>