×

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் பிரபல பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது: பெங்களூரு அழகிகள் 3 பேர் கைது

சென்னை: அடையாறு இந்திரா நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்த நிஷா (29), பெசன்ட் நகர் 5வது அவென்யூவில் மசாஜ் சென்டர்  நடத்தி வருகிறார். இங்கு பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு துணை கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று அந்த மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். அப்போது, நிஷா, தனது ஆண் நண்பரான கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த அஜய் (28) என்பவருடன் இணைந்து செல்போன் குறுஞ்செய்திகள் மூலம் விளம்பரம் செய்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.இதற்காக திருநெல்வேலி, பெங்களூரு பகுதிகளில் இருந்து 3 இளம் அழகிகளை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. மேலும், நிஷா பிரபல பாலியல் புரோக்கர் எனவும், இவர் மூலம் பல மசாஜ் சென்டர்களுக்கு இளம் பெண்கள் சப்ளை செய்யப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு போலீசார், பிரபல பாலியல் புரோக்கர் நிஷா மற்றும் அவரது ஆண் நண்பர் அஜய் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பெங்களூரு, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். கைது ெசய்யப்பட்ட பெண் புரோக்கர் உளபட 2 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 3 இளம்பெண்களை நீதிமன்ற உத்தரவுப்படி காப்பகத்தில் ஒப்படைத்தனர்….

The post மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் பிரபல பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது: பெங்களூரு அழகிகள் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Chennai ,Nisha ,Besant Nagar 5th Avenue ,Adyadaru Indira Nagar 3rd Cross Street ,Centre ,Bengaluru ,
× RELATED பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!