×

சஞ்சனா சிங் நடிக்கும் டிம் டிப்

எல்.சி.நீரஜா பிலிம்ஸ் சார்பில் டாக்டர் தணிகாசலம் தயாரிக்கும் படம், டிம் டிப். மோனிஷ் குமார், சஞ்சனா சிங், கே.பாக்யராஜ், டாக்டர் சீனிவாசன், கே.ஆர்.விஜயா, பெரேரா நடிக்கின்றனர். இசை: ஆதிப், ஹமரா, கார்த்திக். இயக்கம், அருணாச்சலம் ஆனந்த். அவர் கூறுகையில், ‘வாகனத்தின் முன்னால் இருக்கும் முகப்பு விளக்கு பிரகாசமாக இருந்தால் அது டிப். மங்கலாக இருந்தால் அது டிம்.

எந்த இடத்தில் டிம்மாக எரியவிட வேண்டும், எந்த இடத்தில் டிப்பாக எரியவிட வேண்டும் என்பதை டிரைவர் தீர்மானிப்பார். இது வாழ்க்கைக்கும் பொருந்தும். எந்த இடத்தில் நாம் பிரகாசிக்க வேண்டும், அதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று புரிந்துகொண்டால், வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும் என்பதை படம் சொல்கிறது’ என்றார்.

Tags : Tim Dip ,Sanjana Singh ,
× RELATED சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’