×

அதர்வா ஜோடி லாவண்யா திரிபாதி

தமிழில் பிரம்மா, மாயவன் படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி, தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்குக்கு சென்றார். தற்போது மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில், அதர்வா ஜோடியாக நடிக்கிறார். ஒளிப்பதிவு, சக்தி சரவணன். இயக்கம், ரவீந்திர மாதவா. படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியது...

எங்கள் படத்திற்கு ஹீரோயின் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமான பணியாக இருந்தது. இப்படத்தின் நாயகி பாத்திரத்தை முழுமையாக வடிவமைத்த பிறகு இக்கதாப்பாத்திரத்தில் நடிக்க நல்ல கவர்ச்சியான, மென்மை மிகுந்த நேர்த்தியான, நாயகியாக இருக்க வேண்டும் தேடினோம்.

அதே நேரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கும் திறமையும் வேண்டும் என்று நினைத்தோம். கண்மூடித் திறக்கும் நேரத்தில் வந்து போகக்கூடிய பாத்திரம் அல்ல இது. படம் முழுதும் பயணம் செய்யும் அழுத்தமான சக்தி வாய்ந்த பாத்திரம்.

Tags : Atharva ,Lavanya Tripathi ,
× RELATED நேசிப்பாயா பட விழாவில் ஆகாஷ் முரளியை அறிமுகம் செய்த நயன்தாரா