×

பாக்யராஜை பதறவிட்ட சஞ்சனா

புதுமுகம் மோனிஷ் குமார், சஞ்சனா சிங் நடிக்கும் படம் டிம் டிப். டாக்டர் தணிகாசலம் தயாரிக்கிறார். அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். இசை:ஆதிப், ஹமரா, சி.வி.கு.கார்த்திக். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய சஞ்சனா சிங்,’படத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்கள். அனைவரும் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

பாக்யராஜுடன் நடித்தபோது நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார்’ என்றார். பிறகு கே.பாக்யராஜ் பேசும்போது, ’இப்படத்தின் பாடல் காட்சியில் நெருக்கமாக இருக்க வேண்டிய காட்சிகளில் ஹீரோவும், ஹீரோயினும் நெருக்கமாக இல்லாமல் இடைவெளி விட்டிருந்தனர். ஒரே போர்வைக்குள் இருக்கும் காட்சியிலும் இருவரும் விலகி இருந்தனர்.

இருவரும் கட்டிப்பிடிக்க சங்கோஜப்பட்டிருக்கிறார்கள். அந்தக் காட்சிக்கு முன்பு இருந்த இடைவெளியில் அவர்கள் ஏதாவது செய்திருக்க வேண்டும். இங்கு சஞ்சனாசிங் பேசும்போது நான் நிறைய சொல்லி கொடுத்தேன் என்றார். இப்படி மொட்டையாக பேசினால் மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள். பேசும்போது முழுமையாகப் பேசவேண்டும். நடிப்புக்கு டிப்ஸ் கொடுத்தேன் என்று தெளிவாக சொல்லியிருக்க வேண்டும்’ என்றார்.

Tags : Sanjana ,Bhagyaraj ,
× RELATED சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’