ரெஜினா கெசன்ட்ரா புது முயற்சி

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று தொடக்க காலத்தில் பிடிவாதம் பிடித் தவர் நடிகை ரெஜினா. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தன. பிறகு கவர்ச்சிக்கு துணிந்தார். மளமளவென தமிழ், தெலுங்கில் படங்கள் குவிந்தன. ஆனால் இளம் நடிகைகள் வரவால் மீண்டும் பட வாய்ப்புகளை பறிகொடுத்தார். தற்போது அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் பாணியில் சரித்திர, புராண கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.

சூர்ப்பனகை என்ற படத்தில் ரெஜினா நடிக்கிறார். இதற்காக அவர் புராண காலத்து இளவரசிபோல் மேக் அப் அணிந்து நடித்திருக்கிறார். கார்த்தி ராஜு இயக்கி உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதில் ரெஜினாவின் தோற்றம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Related Stories: