அனுஷ்காவை கடுப்பேற்றும் தயாரிப்பாளர்

அனுஷ்கா படம் திரைக்கு வந்து சுமார் 2 வருடம் ஆகிறது. அவர் நடித்த பாக்மதி கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு திரைக்கு வந்தது. அதன்பிறகு அவர் நடித்த படம் எதுவும் திரைக்கு வரவில்லை. சிரஞ்சீவி நடித்த சே ரா நரசிம்ம ரெட்டி படத்தில் கெஸ்ட்ரோலில் நடித்திருந்தார். உடல் எடை கூடியதால் அதை குறைப்பதற்கான கடுமையான பயிற்சிகளில் அனுஷ்கா ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில்தான் சைலன்ட் என்ற  படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். இப்படத்தில் அனுஷ்கா நடித்து முடித்து மாதக்கணக்கில் ஆகியும் படத்தை ரிலீஸ் செய்யாமல் தள்ளிப்போட்டு வருகின்றனர். இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.

இது அனுஷ்காவை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. படத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும், தேவைப்பட்டால் ரீஷூட் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் கோனா வெங்கட் இயக்குனரிடம் கூற அதற்கான பணி தற்போது எடிட்டிங் டேபிளில் நடந்து வருகிறதாம். படம் ரிலீஸ் ஆகிவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அனுஷ்காவுக்கு தயாரிப்பாளரின் இந்த செயல் அதிர்ச்சி அளித்திருக்கிறது.

Related Stories:

>