×

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடல் காவல் துறை மரியாதையுடன் அடக்கம்: அமைச்சர்கள், எம்பிக்கள், தமிழறிஞர்கள் நேரில் அஞ்சலி

சென்னை: தமிழறிஞர்அவ்வை நடராஜன் உடல் காவல் துறை மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அமைச்சர்கள், எம்பிக்கள், தமிழறிஞர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மூத்த தமிழறிஞர், முன்னாள் தமிழக அரசு செயலாளர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராஜன், சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். அவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை அவ்வை நடராஜன் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் அவ்வை நடராஜனின் தமிழ் பணிகளை கவுரவிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறை மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடத்த உத்தரவிட்டார்.இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் அவ்வை நடராஜன் உடல் அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலை ஜெகத்ரட்சகன் எம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் சுமந்து வந்தனர். தொடர்ந்து மயிலாப்பூர் இடுகாட்டில் இறுதிச்சடங்கு நடந்தது. இதில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். தொடர்ந்து காவல் துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். …

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடல் காவல் துறை மரியாதையுடன் அடக்கம்: அமைச்சர்கள், எம்பிக்கள், தமிழறிஞர்கள் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : CM. G.K. ,stalin ,tamil ,natarajan ,nadarajan ,Chennai ,Police Department ,Tamil Nadu ,Principal ,B.C. G.K. ,Tamil Natarajan ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...