×

47-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சியை டிசம்பர் இரண்டாவது வாரத்திற்குள் நடத்த வேண்டும்: சுற்றுலாத்துறை இயக்குநர் சந்திப் நந்தூரி தலைமையில் ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா  வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி தலைமையில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி சிறப்பாக  நடத்திடும் வகையில் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது டிசம்பர் 2-வது வாரத்திற்குள் முடித்து தொடக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கை: 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2023-ஐ மிகச்சிறப்பாக நடத்திடும் வகையில், அரசின் பல்வேறு துறைத் தலைவர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உயர்அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி தலைமையில் தமிழ்நாடு சுற்றுலா வளாகத்தில் 22.11.2022 அன்று  நடைபெற்றது. ஆலோசனையின் போது பல்வேறு அரசுத்துறை அரங்குகள் அமைப்பதற்கான பணிகளை டிசம்பர் 2-வது வாரத்திற்குள் முடித்து, பொருட்காட்சி தொடக்க விழா நடத்துவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், அரசுத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நல திட்டங்கள், சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் அறிந்து கொள்ளும் வண்ணம் அந்தந்த துறைகளின் அரங்குகளை புதுமையான முறையில் அமைத்திடுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது.  இவ்வாறு சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post 47-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சியை டிசம்பர் இரண்டாவது வாரத்திற்குள் நடத்த வேண்டும்: சுற்றுலாத்துறை இயக்குநர் சந்திப் நந்தூரி தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : 47th India Tourism, Industry Expo ,Tourism Director ,Sandeep Nanduri ,Chennai ,Tamil Nadu Tourism Development Corporation ,Managing Director ,47th Indian Tourism and Industry Expo ,47th India Tourism and Industry Fair ,
× RELATED திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 100...